Shanmugan Murugavel / 2024 ஜூலை 03 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் எட்டு மாணவ, மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
கடந்த வாரயிறுதியில் நடைபெற்ற இப்போட்டியில் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 13 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆத்திப், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எம்.எஸ்.எப். சபீஹா இரண்டாமிடத்தையும், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆதில் ஹசன் ஐந்தாமிடத்தையும், எம்.எம். மயீஸ் அஹமட் ஏழாமிடத்தையும், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் எம்.ஆர். ஆயிஷா மூன்றாமிடத்தையும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆஷிப் இரண்டாமிடத்தையும், எஸ்.டி. இத்தர்ஷனன் மூன்றாமிடத்தையும், எம்.எஸ்.எம். சியாப் நான்காமிடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இம்மாணவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட ஆசியர்களான அன்பஸ், பைசல், றியாஜ் ஆசிரியைகளான சகீலா, ஹிசானா, அஸ்ரிபா, அமிறுன்நிசா ஆகியோருக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் தெரிவித்துள்ளார்.
4 hours ago
7 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
16 Nov 2025