Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் கடினபந்து கிரிக்கெட் தொடரில், 15 வயதுக்குட்பட்ட மூன்றாம் பிரிவு முதற்சுற்றுப் போட்டிகளில் மாத்தறை வலயத்தில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று மாத்தறை தாருல் உலூம் பாடசாலை சாதனை படைத்துள்ளது.
முதலாவது சுற்றில், மாத்தறை மகா வித்தியாலயம், றாகுல கல்லூரி, பாலட்டுவ மத்திய மகா வித்தியாலயம், உயங்கொட தேசிய பாடசாலை ஆகியவற்றுடனான போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு தாருல் உலூம் பாடசாலை தகுதி பெற்றுள்ளது.
தாருல் உலூம் பாடசாலை அதிபர் எம்.ரீ.எம். மிப்தாஹ், கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் எம்.எல். ராஜிடீன், கிரிக்கெட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் எம்.எஸ்.எம். ராதி ஆகியோரின் வழிகாட்டலுடன் பாடசாலை பிரகாசித்து வருகிறது.
இரண்டாவது சுற்று போட்டிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறன.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago