2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மீறியவர்களுக்கே தடைக்கடிதம் ’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லீக்கின் சட்டதிட்டங்களை மீறி வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கே தடைக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் தொடர்பாக மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் இன்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறித்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விசேட விதமாக வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் சம்பந்தமாக தெளிவான விளக்கத்தை அளிக்க விரும்புகின்றேம்.கடந்தாண்டு இத்தொடரை உருவாக்கியதற்கு முக்கிய பங்கு வகித்தவர்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்தாண்டு உரிமையாளர்களுக்கும், வீரர்களின் நலனுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அங்கே நடைமுறைப்படுத்தவில்லை. கணக்குளும் சீராக காட்டப்படவில்லை. அணியொன்றுக்கு 600,000 ரூபாய் பெறப்பட்ட போதிலும் அதற்கு தகுந்த செலவு விபரம் வழங்கப்படவில்லை.

இந்நிலையிலும் இவ்வாண்டு நடைபெற இருந்த தொடருக்கு முன்பாக பல கேள்விகள் மன்னார் கால்பந்தாட்டக் கழக உரிமையாளரால் கேட்கப்பட்டும் அவருக்கு எந்தப் பதில்களும் வழங்கப்படவில்லை என்பதோடு வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் நிர்வாகமானது மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்குடனும் எவ்விதக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. 

கடந்தாண்டு மன்னார் லீக்கை நம்பி 3,800,000 ரூபாய்க்கும் மேலதிகமாக செலவு செய்த சாதாரண தொழில் புரிவோர் எமது கால்பந்தாட்டத்தையும் எமது வீரர்களையும் வளர்க்க வேண்டும் என்று செலவு செய்தார்கள். இந்தாண்டும் அவர்கள் செலவு செய்யத் தயாராகவே இருந்தார்கள். முடிவு வரும் வரை காத்திருந்தார்கல். ஆனால் அவர்களுக்கு வந்த முடிவு உரிமம் இரத்துச் செய்யப்ட்டதாகவே இருந்தது.

எனவே இதனடிப்படையில் கால்பந்தாட்டத்தில் பிரபல்யமான மன்னார் மாவட்டத்துக்கே ஏற்பட்ட இந்த நிலைமைக்கு எதிராக கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டார்கள்.

 

 நேர்மையாகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்புடனும் ஒழுக்கத்துடனும் பக்கச்சார்பு இன்றியும் மன்னார் லீக் நிர்வாகத்தை நாம் நடாத்திவருகின்றோம்.

 எமது கால்பந்தாட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்ற நோக்கோடு வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் நிர்வாகம் செயற்பட்டிருக்கின்றது. எனவே இவ்வாண்டு வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கில் மன்னார் கால்பந்தாட்டக் கழக உரிமையாளரின் கேள்விகளுக்கு ஒழுங்கான முடிவு கிடைக்கும் வரை மன்னார் மாவட்ட வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றவேண்டாம் என அனைத்து கழகங்களுக்கும் அறிவித்திருந்தோம். இதில் 95 சதவீதமான கழகங்கங்கள் லீக்கின் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டிருந்தனர்.

ஒரு சில கழகங்களின் வீரர்கள் மாத்திரம் சில நபர்களின் துண்டுதல்களினாலும் ஆசை வார்த்தைகளாலும் லீக்கின் சட்டதிட்டங்களை மீறி போட்டிகளில் பங்குபற்றினார்கள். அவ்வாறானவர்களுக்கே லீக்கின் யாப்பு விதிகளுக்கமைய தடைக்கடிதம் அனுப்பப்பட்டது.

 இதுவே லீக்கின் நடைமுறையாகும். லீக்கின் சட்டதிட்டத்தை மதித்தும் மன்னார் கால்பந்தாட்டக் கழக உரிமையாளர்களின் நியாயத்தை மதித்தும், மன்னார் மக்களின் தியாகத்தை மதித்தும் போட்டியில் வீரர்களை அனுமதிக்காத கழகங்களின் தலைவர், செயளாளர்,நிர்வாகத்தினர் மற்றும் போட்டிகளில் பங்குபற்றாத வீரர்கள் அனைவருக்கும் எமது மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக் சார்பாக மனமார்ந்த கௌரவத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X