Freelancer / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹீம்
கல்குடா டோன்ட் டச் ளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஈஸ்டர்ன் இ-10 பிளாஸ்ட் கடினபந்து கிரிக்கெட் தொடரில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனாக முடிசூடியது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட அணிகளுடன் பொலனறுவ மாவட்டத்தைச் சேர்ந்த அணிகளுமாக மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தை வென்றே பிளையிங் ஹோர்ஸ் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய சம்மாந்துறை 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ் 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இறுதிப் போட்டியின் நாயகனாக முஹம்மட் றிபானும், தொடரின் நாயகன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளராக எஸ்.எம். சுஜான் தெரிவானார்.
32 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago