Editorial / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஜெயிலர் ஒருவரும் பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
நேற்று காலை மெகசின் சிறைச்சாலையில் நடந்த ஒரு சம்பவத்தில் இரண்டு கைதிகளும் சிறை அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 வயதுடைய கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு கைதிகள் சிறை அறைகளை விட்டு வெளியேறி தப்பியோட முயன்றபோது, அதனைத் தடுக்க ஒரு சிறைக் காவலர் முயன்றபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தில் அவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொரளை பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொரளை பொலிஸார் இது குறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். R
41 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
41 minute ago
1 hours ago