2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

பொகவந்தலாவ பஸ் விபத்தில் 34 மாணவர்கள் காயம்

Editorial   / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ், செ.தி.பெருமாள்

ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கி, மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில், 34 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) கா​லை  இடம்பெற்றுள்ளது.

பேருந்தின் பிரேக் (Braking system) பகுதியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, சாரதி சாமர்த்தியமாக செயற்பட்டு பேருந்தை பிரதான வீதியோரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி நிறுத்தியுள்ளார்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக போகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை சீராக உள்ள போதிலும், மேலதிக சிகிச்சைக்காக நான்கு மாணவர்கள் டிக்கோயா அடிப்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .