Janu / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு சுற்றிவளைப்பின் போது, அதிக பாதுகாப்புடைய அரிய வகை நத்தையோடுகள் (Smooth Spider Shells) மற்றும் விலங்கு பாகங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 19, 42 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் கலேவெல, பத்கொலகொல்ல மற்றும் அளுத்பம்பரகஸ்வெவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.
விமானப்படை புலனாய்வு பிரிவினர் நீண்டகாலமாக முன்னெடுத்து வந்த இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றது. இதன்போது, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் தந்திரோபாயமாக செயற்பட்டு, பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் போல சென்று சந்தேக நபர்களை கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது மென்மையான சிலந்தி நத்தையோடுகள் 22 (Smooth Spider Shells, ஒற்றை மான் கொம்புகள் 02, மான் கொம்பு துண்டுகள் 03, முழுமையான மான் கொம்பு தொகுதி 01 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

14 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
1 hours ago