2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

முதலிடம் பெற்ற பட்டிருப்பு வலயம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 08 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ. சக்தி

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்றது.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மாதானத்தில் புதன்கிழமை (03) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (07) முடிவுக்கு வந்த இப்போட்டிகளில் 148 புள்ளிகளைப் பெற்றே பட்டிருப்பு  வலயம் முதலிடத்தைப் பெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயம் சார்பில் களுதாவளை தேசிய பாடசாலை   77 புள்ளிகள், செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 37 புள்ளிகள், மண்டூர்-13  விக்னேஸ்வரா மகா வித்தியாலம் 11 புள்ளிகள், மண்டூர்-14 சக்தி மகா வித்தியாலம் 11 புள்ளிகள், பழுகாமம் கண்டுமனி மகா வித்தியாலம் 05 புள்ளிகள், தேற்றாத்தீவு மகா வித்தியாலம் 04 புள்ளிகள், தும்பங்கேனி மகா வித்தியாலம் 01 புள்ளி, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் 01 புள்ளி, குருமன்வெளி சக்தி மகா வித்தியாலம் 01 புள்ளியையும் பெற்றுப் கொடுத்துள்ளன.

இம்முறை களுதாவளை தேசிய பாடசாலை சார்பில் இரண்டு மாகாண புதிய சாதனைகளும் மற்றும் ஒரு சாதனையும்  மாணவர்களால் சமப்படுத்தப்பட்டிருந்தது.

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுநர் வீரராக களுதாவளை தேசிய பாடசாலையை சேர்ந்த 194 சென்றி மீற்றர் பாய்ந்து புதிய சாதனை படைத்த கு. பகிர்ஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் பிரிவில் 65 புள்ளிகளுடன் களுதாவளை தேசிய பாடசாலை மாகாணத்தில் முதலிடம் பெற்றுக்கொண்டது.

ஒட்டுமொத்தமாக 77 புள்ளிகளுடன் தொடர்ந்து மாகாணத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை இம்முறை முதலிடம் பெற்றுக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இப்போட்டிகளில் இரண்டாமிடத்தை 128 புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயமும், மூன்றாமிடத்தை 119 புள்ளிகளைப் பெற்று மகோயா கல்வி வலயமும் பெற்றுக் கொண்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .