Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 22 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

இவ்வாண்டுக்கான வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் அணியும், பெண்கள் அணிகள் இரண்டும் வட முதலிடத்தைப் பெற்றுள்ளன.
முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களை சேர்ந்த இளைஞர், யுவதிகள் அணியினர் பங்குகொண்டிருந்தார்கள்
முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணியினர் 7 தங்கப் பதக்கங்களையும், 5 வெள்ளிப் பதங்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார்கள்.
மாகாணத்தில் இரண்டாமிடத்தை வவுனியா மாவட்ட அணி 2 தங்கப் பதங்கங்களையும்,3 வெள்ளி பதக்கங்களையும்,1 வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பெற்றுள்ளார்கள்.
மூன்றாமிடத்தை யாழ்ப்பாண மாவட்டஅணியினர் 2 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதங்கத்தையும் பெற்று பெற்றனர்.
பெண்கள் அணியில் முல்லைத்தீவ மாவட்டம் மூன்று தங்கப் பதக்கங்களையும், நான்கு வெள்ளி பதக்கங்களையும், 2 வெண்கலப் பதகங்களையும் பெற்று மாகாணத்தில் முதலிடத்தில் பெற்றுள்ளதுடன், இரண்டாமிடத்தை வவுனியா மாவட்ட பெண்கள் அணி 2 தங்கப் பதக்கங்களையும் 1 வெண்கலப்பதக்கத்தையும் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்கள். மூன்றாமிடத்தை யாழ் மாவட்ட பெண்கள் அணியினர் ஒரு வெள்ளிப் பதகத்தை பெற்று பெற்றுள்ளார்கள்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago