2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘முல்லைத்தீவுக்கு விளையாட்டுக் கட்டடத் தொகுதி தேவை’

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தவு மாவட்டத்திற்கென விளையாட்டுக் கட்டடத் தொகுதியொன்று தேவையென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றை முன்மொழிந்துள்ளார்.

இந்நிலையில் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை உரிய தரப்பினருக்கு நடவடிக்கைக்காக அனுப்பிவைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  வியாழக்கிழமை (28) இடம்பெற்றநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பில்  ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக் கட்டடத் தொகுதி இல்லாத நிலை காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஏற்கெனவே பாராளுமன்றில் நான் பேசியுள்ளதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவேண்டுமெனப் பேசியிருக்கின்றேன்.

முல்லைத்தீவு மாவட்டமென்பது பின்தங்கிய மாவட்டமாக காணப்படுகின்றது. இருப்பினும் இந்த மாவட்டத்திலும் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து செயற்படவேண்டும். எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் விளையாட்டுக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவேண்டியது அவசியமாகும்.  இந்த விடயத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் ஆளுநர் ஆகியோரும் கரிசனையோடு செயற்படுகின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .