2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மைதானமில்லாத பாடசாலையிலிருந்து மாகாணத்துக்கு மாணவர்கள்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராஜன் ஹரன்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்திலிருந்து இரண்டு மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

விநாயகர் வித்தியாலயமானது அதிகஷ்ட பிரதேச பாடசாலை ஆகும். இங்கு விளையாட்டு மைதானம் கிடையாது. இவ்வாறு இருக்க நீளம் பாய்தல், குண்டு போடுதல் ஆகிய போட்டிகளில் ஒவ்வொரு மாணவர் சாதனை புரிந்து உள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை அதிபர் எஸ். ரகுநாதன், பிரதி அதிபர் ரி. நடேசலிங்கம் ஆகியோர் மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார்கள். இவர்களை பயிறுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கு பெற்றோர், பாடசாலை சமூகம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .