Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்
இவ்வாண்டுக்கான ” Right my way “ சர்வதேச அலைச்சறுக்கு போட்டி அண்மையில் ஹிக்கடுவ கடற்கரையில் பிரதான நீர்ச்சறுக்கு மையத்தில் இடம்பெற்றது.
130க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டு விளையாட்டு வீர வீராங்கனைகள் அலையின் ராஜா, அலையின் ராணி பட்டங்களுக்காகப் போட்டியிட்டனர்.
இதில், 81 உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஆண் பங்கேற்பாளர்களுடன், அலையின் ராஜா பட்டத்துக்காக 96 சுற்றுகளும் இடம்பெற்றன.
இவ்வாண்டு நிகழ்வில் அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, பெல்ஜியம், ஜேர்மனி, எஸ்தோனியா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, ரஷ்யா, சுவீடன், ஐக்கிய அமெரிக்கா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதில் ஆண்கள் பகிரங்க பிரிவில் லக்சித்த மதுஷன் ”அலையின் ராஜா ” பட்டத்தையும், மகளிருக்கான பகிரங்க பிரிவில் நிக்கிதா ரொப் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ” அலையின் ராணி” பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.
21 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
5 hours ago