Shanmugan Murugavel / 2021 மார்ச் 21 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலமுனை றைஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், றைஸ்டார் ஜீனியர் பிறீமியர் கிரிக்கெட் லீக் 2021 கிரிக்கெட் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், பிறீமியர் லீக் நான்கு கழக வீரர்களுக்கான வீரர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வும், பாலமுனை பொது விளையாட்டு மைதான அரங்கில் இன்று இடம்பெற்றது.
பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம். பாயிஸ் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளர் எஸ்.எம்.எம். ஹனிபா, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். முஸம்மில், கழகத்தின் ஆலோசகர்களான பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அதிபர் கே.எல். உபைதுள்ளா, கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். இப்றாஹிம், அட்டாளைச்சேனை கல்விக் கல்லுரி விடுதி அத்தியட்சகர் எஸ்.எல்.றகுமதுள்ளா, தொழிலதிபர் கே.எல்.எம். ஜிப்ரி, கழகத்தின் செயலாளர் வை.எம். அசாம், கழகத்தின் பொருளாளர் ஏ. றிஸ்மி உட்பட கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
31 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
47 minute ago
1 hours ago