Gopikrishna Kanagalingam / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

துடுப்பாட்டத்தில் ஷமொட் அத்துலத்முதலி 69 ஓட்டங்களையும் ஸெனித் விக்கிரமநாயக்க 61 ஓட்டங்களையும் திலின பெரேரா 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், திலும் சுதீர 3 விக்கெட்டுகளையும் உபேந்திரா சுபசிங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கரதெனிய மத்திய கல்லூரி அணி, 49 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில், வெஸ்லியின் அன்ட்ரூ பரயஸ், மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்த அவர், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட கரதெனிய மத்திய கல்லூரி அணி, 114 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸ் மற்றும் 87 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago