Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

வரலாற்றில் முதற் தடவையாக 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டாத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் மாகாண மட்ட இறுதி போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில், வற்றாப்பளை மகா வித்தியாலயம், கலைமகள் வித்தியாலய 16 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி தேசியத்துக்கு தெரிவாகி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமையை சேர்த்துள்ளார்கள்.
குறித்த தொடரில் முள்ளியவளை வற்றாப்பளை மகா வித்தியாலயம் சம்பியனானதுடன், இரண்டாமிடத்தை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயமும் பெற்றுக் கொண்டுள்ளன.
இந்நிலையில் சம்பியனான வற்றாப்பளை மகா வித்தியாலய அணியை ஊக்கப்படுத்தி, தேசியப் போட்டியில் திறம்பட செயற்பட்டு வெற்றியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட செயலக்தால் ஊக்கப்படுத்தி பாராட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இதன்போது வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் கரப்பந்தாட்டத்துக்கான உபகரணங்கள் சிலவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago