Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை மாவட்டத்தில் வலது குறைந்தவர்களுக்கான மாவட்ட மட்ட பயிலுநர் விளையாட்டு போட்டிகளை நடாத்துவது தொடர்பான கலந்துரையாடலொன்று திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் சமூக சேவைகள் திணைக்கள சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக நடைபெறவுள்ள குறித்த விளையாட்டு போட்டிகளில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் வலது குறைந்த நபர்கள் பங்குபற்றவுள்ளனர். இதற்காக பங்குபற்றுநர்களுக்கான ஏற்பாடு மற்றும் சக்கர நாற்காலி ஓட்டப்போட்டி உள்ளிட்ட பல்வகைமை கொண்ட பிரிவுகளில் இது இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் புள்ளி விபரங்களின் அடிப்படையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இடம் பெறலாம் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
44 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago