2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் சைவப்பிரகாச கல்லூரி சாதனை

Janu   / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் 20 வயதின் கீழ் பிரிவில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாம் இடத்தையும், உடுவில் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், மானிப்பாய் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் 18வயதுப் பிரிவின் கீழ் நடைபெற்ற போட்டியில் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், பரந்தன் இந்து மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும், அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

உடுவில் மகளிர் கல்லூரியின் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறித்த போட்டிககளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள்  உடுவில் மகளிர் கல்லூரியின் மைதானத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் செல்வி ரொசானா மதுரமதி குலேந்திரன்  தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் விருந்தினர்களாக வலிகாமம் வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் செந்தில் குமரன், உடுவில் மகளிர் கல்லூரியின் ஆன்மீக குரு ரெப.லிங்கேசன், உடுவில் மகளிர் கல்லூரியின் விளையாட்டு செயலாளர் ப.தர்மகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X