2025 மே 01, வியாழக்கிழமை

வாழைச்சேனை ஆயிஷா முதலிடம்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எச்.எம்.எம். பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் நடைபெற்ற சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் என். சஹாப்தீன் தெரிவித்தார்.

மகளிர் பிரிவில் கலந்து கொண்ட தரம் 3, 4-இல் கல்வி கற்கும் மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்\.

அதேபோன்று, ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் கோட்டத்தில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளனர்.

தங்களது திறமைகளைப் வெளிப்படுத்தி வலய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் பயிற்றுவித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.எம். அம்ஜத், எஸ்.ஐ.எம். றிபாஸ் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய வகுப்பாசிரியர்கள், பெற்றோர் அனைவருக்கும் சஹாப்தீன் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .