2025 மே 01, வியாழக்கிழமை

விமானப்படை வீர, வீராங்கனைகள் கெளரவிப்பு

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 09 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானப்படை வர்ண விருதுகள் விழா 2022-2023 ஆனது கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றபோது 2022ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான குறூப் கப்டர் றோஜர் வீரசிங்க ஞாபகார்த்த கிண்ணத்தை வலைப்பந்தாட்டத்துக்காக கோபரல் பெரேரா எல்.ஆர்.டி பெற்றதோடு, 2023ஆம் ஆண்டுக்காக நீச்சலுக்காக பெண் அதிகாரி கடேற் சவிந்தி ஜெ.எம்.எஸ் பெற்றிருந்தார்.

மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையாக குத்துச்சண்டைக்காக 2022ஆம் ஆண்டு கூரே எம்.பி.எஸ்.எஸ்ஸும், கிரிக்கெட்டுக்காக 2023ஆம் ஆண்டு சார்ஜன்ட் ரணசிங்க ஓ.யுவும் பெற்றனர்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான லெப்டினன்ட் ஏ வரதராசா ஞாபகார்த்த கிண்ணத்தை 2022ஆம் ஆண்டு ஜூடோவுக்காக சார்ஜன்ட் தர்மவர்தன ஆர்.சி.என்னும், பளுதூக்கலுக்காக 2023ஆம் ஆண்டு ஜயதிலக எஸ்.எம்.எம்மும் பெற்றனர்.

சிறந்த விளையாட்டுப் பிரிவுகளாக 2022ஆம் ஆண்டு சீனன்குடா தளமும், 2023ஆம் ஆண்டு கொழும்புத் தளமும் தெரிவாகின.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .