2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

விரியும் சிறகுகள் வி.க கரப்பந்தாட்டத் தொடர்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 14 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தெமோதரை- வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தின் 121ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11, 12ஆம் திகதிகளில் ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையே மாபெரும் கரப்பந்தாட்டத் தொடரை ஏற்பாடு செய்து பாடசாலை மைதானத்தில்  நடத்தவுள்ளனர்.

இப்போட்டியில் பங்குபெறவுள்ள அணிகளுக்கான பதிவு நடவடிக்கைகள்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அணிகளுக்கான பதிவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி நள்ளிரவு 12 வரை இடம்பெறவுள்ளது. 

அனைத்து போட்டிகளும் விலகல் முறையில் நடத்தப்படவுள்ளது.

தொடரில் முதல் நான்கு இடங்களையும் பெறும் அணிகளுக்கு பணப்பரிசும், வெற்றிக் கேடயங்களும் வழங்கப்படவுள்ளன.

இதன்படி முதலாம் பரிசாக 50,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 30,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும், நான்காம் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதுடன், சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. 

போட்டிகளில் பங்குபெற விரும்பும் அணிகள் தமது பதிவிற்கான மேலதிக விபரங்களை பாடசாலையின் அதிபர் ந. சுந்தரராஜின் 0774945136, ஆசிரியர் சுரேஷின் 0770636360 என்ற தொலைபேசி  இலக்கங்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் என போட்டி ஏற்பாட்டாளர்களான விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X