Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர்
கோட்டமுனை விளையாட்டு கிராமத்தால் கல்முனையில் கிரிக்கெட் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
கிரிக்கெட் துறையை இளைஞர்கள் மத்தியில் மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டமுனை விளையாட்டு கிராமத்தினரிடம் கல்முனை ரினோன் விளையாட்டு கழகத்தின் ரினோன் கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலையத்தால் விடுக்கப்பட்ட வீரர்களுக்கு தேவையான கிரிக்கெட் உபகரணங்கள் வேண்டுகோளையடுத்து ஒரு தொகுதி கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள, கோட்டமுனை விளையாட்டு கிராமத்தால் அன்பளிப்பாக ரினோன் கழகத்தின் நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
ரினோன் கிரிக்கெட் நிலையப் பணிப்பாளரும், பிரதான பயிற்றுவிப்பாளர் எம். எப்.எம். அப்சல் ரிப்கியின் நெறிப்படுத்தலில் கழகத்தின் தவிசாளர் எஸ். எச்.எம். அஸ்மி தலைமையில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது .
இதன் போது பிரதம அதிதியாக கல்முனை தொகுதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் றிஸ்லி முஸ்தபாவும், கெளரவ அதிதியாக கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் ஏ. சிவநாதன், சிறப்பு அதிதியாக கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் மற்றும் பிரதியதிபர் ஐ.எல்.எம். ஜின்னா, விளையாட்டு உத்தியோகத்தர், எஸ்.சப்ரின் நஸார் ,கோட்டமுனை விளையாட்டு கிராமத்தின் உறுப்பினர்கள், ரினோன் கிரிக்கெட் பயிற்றுவிப்பு நிலையத்தின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளார் எஸ்.எம். ரியால், நிர்வாக உறுப்பினர் ஏ.ஜே.எம். ரின்சாத், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago