2025 மே 15, வியாழக்கிழமை

விளையாட்டு விழா

Freelancer   / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

சிறுவர்களே முதன்மையானவர்கள் எனும் தொணிப்பொருளின் கீழ்  மட்டக்களப்பு, குருமண்வெளி சித்தி விநாயகர் பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு விழா குருமண்வெளி மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ந.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.

 இதன்போது மண்முனை தென் எருவில் பற்று முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் திருமதி அருந்ததி சிவரெத்தினம், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் தெ.நவநாயகம், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி இணைப்பாளர் உ.கோகுலராஜ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்த்தர்களான க.புவிதரன்; செ.சத்தியநாதன், மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள், சிறுவார்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 இதன்போது முன்பள்ளி மாணவர்களிடையே மிட்டாய் ஓட்டம்,  கயிறு இழுத்தல், நிறப்பந்து தெரிதல், சங்கீதக் கதிரை, 30 மீற்றர் ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன.  இதன்போது பங்கேற்ற சிறார்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .