2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க விளையாட்டு நிதியம்’

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 02 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹஸ்பர்

விளையாட்டுத்துறை அமைச்சால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் பேரவையானது, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று முன்தினம் முதன்முறையாக கூடியது.

இங்கு பாடசாலை மட்டத்தில் அங்கிகாரம் பெற்ற விளையாட்டு, வீராங்கனைகளை தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லும் வரை அவர்களை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், பாடசாலைக் காலம் முடிவடைந்த பின்னர் விளையாட்டு வீர, வீராங்கனைகளை விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட வேலைத்திட்டம் தயாரிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்தத் திறமை வாய்ந்த விளையாட்டுப் பெண்களை சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றச் செய்வதற்கும் அவர்களின் நலனுக்காக மாகாண விளையாட்டுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, மாகாண விளையாட்டு சபையை அமுல்படுத்துவது தொடர்பில் ஏதேனும் யோசனைகள் இருப்பின் அவற்றை ஒரு வாரத்துக்குகுள் மாகாண விளையாட்டு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் யஹம்பத் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .