Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் உள்ள ஐந்து விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. சத்தியானந்தி நவசிவாயம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கே இவ்வாறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சந்திரகாந்தனிடம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ. பிரசாந்தன் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைய, மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதி திருநீற்றுக்கேணி, மாவிலங்கத்துறை, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் பிரதேசங்களைச் சேர்ந்த கழகங்களுக்கு 50,000 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், சந்திரகாந்தனின் செயலாளர் சட்டத்தரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர், மண்முனைப்பற்று பிரதேச அமைப்பாளர் ஜெயகப் மற்றும் கிராமிய குழு தலைவர்கள் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .