Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 மார்ச் 16 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட விளையாட்டுக் குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்வானது, கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. குறித்த நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை தேடிச்செல்லும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் தற்போது இடம்பெற்ற வருகின்றது. அந்தவகையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் விருப்பம் மற்றும் தகுதி அடிப்படையில் பொருத்தமான விளையாட்டு துறைக்குள் அழைத்து செல்லும் வேலைத்திட்டம், கிளிநொச்சயில் இன்று நடைபெற்றது.
இதன்போது, வீர, வீராங்களைகளின் உடல், ஆற்றல், திறமை ஆகியவற்றை கணித்து அவ்வந்த விளையாட்டு சார்ந்த துறைக்குள் அழைத்து செல்வதற்கான செயல்முறை பரீட்சைகளும் இடம்பெற்றன.
15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் குறித்த தேசிய வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு குழுக்கள் அமைத்து அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தின் இவ்வாண்டுக்கான தேசிய வேலைத்திட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
11 minute ago
15 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
4 hours ago
5 hours ago