2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வென்ற ஓட்டமாவடி வளர்பிறை வி. க

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அப்துல் பாஸித்

ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகத்துக்கும், நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சிநேகபூர்வ கடினபந்து போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளால் வென்றது.

ஓட்டமாவடி அமிர் அலி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 92 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய வளர்பிறை விளையாட்டுக் கழகத்தினர், 11 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .