Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் நாடு தழுவிய ரீதியில் ஒழுங்கு செய்திருந்த 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடரின் அடுத்த சுற்றுப் போட்டிக்கு மாத்தளை சாஹிராக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாத்தளை இந்துக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற கேகாலை றுவன்வெல்ல ராஜசிங்க மகா வித்தியாலயத்துடனான போட்டியில் வென்றே அடுத்த சுற்றுக்கு ஸாஹிராக் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சாஹிராக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 159 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜசிங்க மகா வித்தியாலயம் சகல விக்கட்டுக்களையும் இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago