2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த வன்னியின் பெருஞ்சமர்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 24 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கும், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்குமிடையிலான 10ஆவது வன்னியின் பெருஞ்சமரானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

மகா வித்தியாலய அமைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மகா வித்தியாலயம், முதலில் களத்தடுப்பிலீடுபடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ம. தேனுஜன் 70, சானுஜன் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அபிசாந், பிரவிந்தன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மகா வித்தியாலயம், 9 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இனிங்ஸை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், கதிர்ச்செல்வன் 56, சாத்வீகன் 39, மயூரன் 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நிருக்சன் 4, விதுசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி, ஒரு விக்கெட்டை இழந்து 29 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் சிறந்த சகலதுறைவீரராக மகா வித்தியாலய அணித்தலைவர் ஜோ பிரவிந்தனும், நாயகனாக மகா வித்தியாலயத்தின் எம். தேனுஜனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக மத்திய கல்லூரியின் கதிர்ச்செல்வனும், சிறந்த பந்துவீச்சாளராக மத்திய கல்லூரியின் விதுசனும், சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரியின் பற்றிக்கும் தெரிவாகினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .