Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாவத்துறை, நானாட்டான் பிரதேசத்தில் விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட 1200 போதை குளிசைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து சிலாவத்துறை, நானாட்டான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை கப்பல் நிறுவன அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான இருவரை பரிசோதித்து, தயாரிக்கப்பட்ட 1200 போதை குளிசைகளை கைப்பற்றியதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், 23 மற்றும் 45 வயதுடைய நானாட்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago