Janu / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி, தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் 1416 கிலோ கிராம் பீடி இலைகள் இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (21) அன்று மீட்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி, தலவில கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதக்கும் 41 பைகள் பரிசோதிக்கப்பட்டன. அதிலிருந்து கடற்படையினரின் நடவடிக்கைகளால் கரைக்கு கொண்டு வர முடியாமல், கடத்தல் காரர்களால் கடலில் கைவிடப்பட்ட சுமார் 1416 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago