Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாரவில கடல் பகுதியில் இலங்கை கடற்படை சனிக்கிழமை (07) நடாத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 300 கிலோகிராமை விட அதிக எடையுடைய பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) கைப்பற்றப்பட்டன.
மாரவில கடல் பகுதியில் மேற்கு கடற்படை கட்டளையின் P484 கப்பல் நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த பத்து சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டன. அதிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வர முயற்சிக்கும் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 300 கிலோ கிராமை விட அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.யூ.எம்.சனூன்

46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026