Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிவின் வழிகளை நாம் எவ்வாறு அறிவோம்? ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் சமீபத்தைய கண்காட்சி குறித்து எழுகின்ற ஒரு வினாவே இது. ஆகஸ்ட் முற்பகுதியில் ஹோர்டன் பிளேஸிலுள்ள Bawa Space காட்சியகத்தில் ஆரம்பமாகவுள்ள அறிவின் வழிகள் கண்காட்சி அறிவின் பல்வேறு வடிவங்கள், மற்றும் நாம் தகவல் விபரங்களை கற்கின்ற, பேணிப் பாதுகாக்கின்ற, மற்றும் பகிர்ந்து கொள்கின்ற பல்வேறு வடிவங்களை ஆராய்வதற்கு ஜெஃப்ரி பாவா அவர்களின் லுணுகங்க தோட்டத்தை பயன்படுத்துகின்றது.
மெய்நிகர் யதார்த்தம், திரைப்படம், புடவைகள், வாய்வழி மரபுகள், வரைபடங்கள், விதைகள், மற்றும் மனித உடல் உள்ளிட்ட ஏழு நிறுவகங்கள் மத்தியில், வேறுபட்ட மார்க்கங்களினூடாக எவ்வாறு நுண்ணறிவு மற்றும் புரிதல் ஆகியன உள்வாங்கப்படுகின்றன என்பதை இக்கண்காட்சி ஆராய்கிறது.
பல்லுணர்வு அனுபவத்தைத் தூண்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அறிவின் வழிகள் கண்காட்சிக்குப் புறம்பாக, கண்ணோட்டத்தின் வடிவங்களை வலியுறுத்துவதுடன், எம்மைச் சூழவுள்ள உலகினை நாம் விளங்கிக் கொள்ளும் பல வழிகளைப் பிரதிபலிக்கின்றது.
ஜெஃப்ரி பாவா அவரின் அரும்பொருட்களின் சேகரிப்பின் பாகங்களை இக்கண்காட்சி கொண்டுள்ளதுடன், விருது வென்ற திரைப்பட தயாரிப்பாளர், கட்டடக்கலை நிபுணர், மற்றும் கல்விமான் கிளாரா க்ராஃப்ட் இசோனோ, புகழ்பூத்த ஓவியர், எழுத்தாளர், மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பார்பரா சன்சோனி, மற்றும் புகழ்பூத்த இலங்கை திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ருவின் டி சில்வா ஆகிய மூன்று வருகை கலைஞர்களின் படைப்புக்களும் இடம்பெறவுள்ளன.
அறிவின் வழிகள் ஒவ்வொரு கண்காட்சி ஊடகங்களினூடாகவும் சேகரித்த அல்லது பெற்றுக்கொண்ட அறிவைக் கருத்தில் கொள்ளுமாறு பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இசோனோவின் மெய்நிகர் யதார்த்த கண்காட்சியான Garden as a Cloud தோட்டத்தினுடாக நடந்து செல்லும் போது ஆழமாக ஈர்க்கின்றவாறு லுணுகங்கவின் முப்பரிமாணத் தோற்றத்தைப் பயன்படுத்துவதுடன், தொடர்ச்சியாக மாறுகின்ற ஒரு விடயத்தை நாம் எவ்வாறு வசப்படுத்திக் கொள்வது என்ற கேள்வியை பார்வையாளர்கள் மத்தியில் ஊக்குவிக்கின்றது.
இசோனோவின் படைப்புக்களைக் காட்சிப்படுத்துவதற்கு உதவியமைக்காக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை மிகவும் நன்றி தெரிவிக்கிறது.
“பெந்தோட்டையில் அமைந்துள்ள ஜெஃப்ரி பாவாவின் புகழ்மிக்க தோட்டமான ‘லுணுகங்க’கொண்டுள்ள கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் போற்றி அது குறித்து பரந்த அளவிலான மக்கள் அறிந்து கொள்வதற்காக, உணர்வுகளை ஆழமாக ஈர்க்கின்ற மெய்நிகர் யதார்த்த அனுபவம் மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்வதில் இலங்கையின் ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் Kraft Isono Films ஆகியவற்றுக்கு இடையிலான படைப்பாக்க ஒத்துழைப்பு பலனளிப்பதைக் காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது,” என்று இலங்கைக்கான பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஒர்லான்டோ எட்வேர்ட்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
சன்சோனியின் Araliya and Sky ‘reddha’ நமது சொந்த சூழலை நாம் எவ்வாறு நோக்குகின்றோம் என்ற கேள்வியை பார்வையாளர்கள் தமக்குள்ளே எழுப்புவதை ஊக்குவித்து, தோட்டத்தின் அழகினை அவர் எவ்வாறு காண்கின்றார் என்பதை விபரிப்பதற்கு தறியின் வடிவியல் மொழியை ஒரு ஓவியர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பிக்கின்றது. லுணுகங்கவின் தோட்ட பராமரிப்பாளர்கள் குறித்த தனது திரைப்படத்தில், மனிதர்களுக்கும், நிலத்திற்கும் இடையிலான ஞாபகம் மற்றும் நீடித்த உறவின் வகிபாகத்தை டி சில்வா பரீட்சிக்கின்றார்.
“எமது மானிய உதவிகள் மூலமாக புத்தாக்கமான ஓவியக் கலைகள் மற்றும் கலாச்சார செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் நாம் எப்போதும் பெருமை கொள்கிறோம். ஓவியக் கலைகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வெற்றிகரமான ஐக்கிய இராச்சியம்-இலங்கை கூட்டாண்மைக்கு இது மிகச் சிறந்ததொரு உதாரணம். இக்கண்காட்சியானது எதிர்வரும் மாதங்களில் மாணவர்கள் உள்ளிட்ட பல மக்களை எட்டுமென நான் நம்புகின்றேன்,” என்று எட்வேர்ட்ஸ் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
அறிவின் வழிகள் கண்காட்சி பரந்த மற்றும் பல்வகைப்பட்ட மக்கள் மத்தியில் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதே ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் நோக்கம். கண்காட்சிக்கான இட வசதி மற்றும் சக்கர நாற்காலி மூலமாக செல்லும் வசதிகளை பாவா காட்சிக்கூடம் கொண்டுள்ளது.
விருப்பத்தின் அடிப்படையில் வெளிப்புற காட்சிப் பிரதேசம், செதுக்கல் கலை மற்றும் வர்ணம் தீட்டலுக்கான இட வசதி போன்ற வசதிகளும் இங்கே உள்ளன. இங்கு இடம்பெறும் ஓவியக் கலைகள் குறித்த உணர்வுபூர்வமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் ஓடியோ வழிகாட்டல் மற்றும் தொட்டுணரக்கூடிய அம்சங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அறிவின் வழிகள் கண்காட்சி நிகழ்வானது 2025 ஆகஸ்ட் 2 முதல் 2026 பெப்ரவரி 28 வரை பாவா காட்சியகத்தில் இடம்பெறவுள்ளது. கொழும்பு 07 ஹோட்டன் பிளேஸில் அமைந்துள்ள பாவா காட்சியகத்தில் இடம்பெறவுள்ளது. கண்காட்சி இட வசதி, வடிவமைப்பு மையம், ஆவண காப்பகம், உசாத்துணை நூலகம், மற்றும் பணியாளர் அலுவலகங்கள் போன்றவற்றை பாவா காட்சியகம் கொண்டுள்ளது.
ஜெஃப்ரி பாவா அவர்கள் காலமாகிய வேளையில் தனது சொத்து முழுவதையும் அவர் ஜெஃப்ரி பாவா மற்றும் லுணுகங்க அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கியுள்ளார். புகழ்பூத்த கட்டடக் கலைஞரின் சேகரிப்புக்கள் அனைத்திற்கும் இந்த அறக்கட்டளைகளே பொறுப்பு வகிப்பதுடன், வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக அவ்வப்போது கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றது.
பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆதரவுடன் அறிவின் வழிகள் கண்காட்சி இடம்பெறுவதுடன், ஜெஃப்ரி பாவா அறக்கட்டளையின் கண்காட்சி நிகழ்வுக்கான தொடக்க கூட்டாளரான Kohler India ஆதரவும் இதற்கு உள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சில் குறித்த விபரங்கள்கலாச்சார உறவுகள் மற்றும் கல்வி வாய்ப்புக்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச நிறுவனமே பிரிட்டிஷ் கவுன்சில். உறவுகளைக் கட்டியெழுப்பி, ஐக்கிய இராச்சியம் மற்றும் உலகளாவிலுள்ள நாடுகளிலுள்ள மக்களுக்கு இடையில் புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் வளர்த்து, அமைதிக்கும், சுபீட்சத்திற்கும் நாம் உதவுகின்றோம்.
கலைகள் மற்றும் கலாச்சாரம், கல்வி, மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் எமது வேலைத்திட்டங்கள் மூலமாக அத்தகைய உதவிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மக்களுடன் இணைந்து நாம் பணியாற்றி வருவதுடன், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் நேரடியாகவே பணிகளை முன்னெடுத்தும் வருகின்றோம். 2021-22 காலப்பகுதியில் 650 மில்லியன் மக்களை நாம் எட்டியுள்ளோம்.
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
1 hours ago