2025 மே 07, புதன்கிழமை

STF என கூறி வீட்டில் கொள்ளை

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் எனக் கூறி வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் பியகம பகுதியில் நேற்று(23) பதிவாகியுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

58,000 ரூபாய் பணமும், 4 அலைபேசிகளும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பியகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X