Janu / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாரதி அனுமதிப்பத்திரமின்றி காரை செலுத்திய மீரிகமவில் உள்ள விகாரையில் வசிக்கும் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாபிட்டிய நகரிலிருந்து விகாரைக்கு பயணித்துக்கொண்டிருந்த 46 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்பெற்ற தகவலுக்கமையவே குறித்த தேரர் பயணித்த கரை சோதனையிட்டுள்ளதுடன் சரியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago