2025 மே 08, வியாழக்கிழமை

அளுத்கம பொலிஸில் புதிதாக 13 பேர் கடமை

S. Shivany   / 2021 ஜனவரி 24 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுவதற்காக, வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பேர் தற்காலிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகள் 09 பேருக்கு, கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசான் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள், ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் 08 பேரும், போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியும் கொவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X