Editorial / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

Study Queensland மற்றும் Trade and Investment Queensland (TIQ) ஆகியன இணைந்து இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச கல்வி வாய்ப்புக்களை வலுப்படுத்துகின்றன
குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக முகவர் அமைப்பான Trade and Investment Queensland (TIQ) மற்றும் Study Queensland ஆகியன ஒன்றிணைந்து, அவுஸ்திரேலியாவிலுள்ள ஐந்து முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய விசேட இரு நாள் ஈடுபாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றின் மூலமாக, இலங்கை மாணவர்களுக்கு உயர் தரம் கொண்ட சர்வதேச கல்விக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்வதில் தாம் காண்பித்து வரும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. Griffith, James Cook, Bond, Central Queensland, மற்றும் Southern Cross ஆகிய பல்கலைக்கழகங்களின் தூதுக்குழுவினர் இந்த அமர்வில் பங்குபற்றியுள்ளதுடன், தத்தமது பல்கலைக்கழகங்கள் வழங்கும் கற்கைநெறிகள், புலமைப்பரிசில்கள், மாணவர்களுக்கான உதவிச் சேவைகள், மற்றும் இலங்கை மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தொழிலை இலக்காகக் கொண்ட வழிமுறைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
“கல்வி, புத்தாக்கம், மற்றும் மாணவர்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் மகத்துவத்தைப் பொறுத்தவரையில் சர்வதேசரீதியான அங்கீகாரத்தை குயின்ஸ்லாந்து பெற்றுள்ளதுடன், இத்தகைய அளவில் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை இலங்கை மாணவர்களும் பெற்றுக்கொள்ள உதவ நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று Trade & Investment Queensland ன் இந்திய அலுவலகத்தைச் (பெங்களூர்) சேர்ந்த கல்வித் துறைக்கான (தெற்காசியா) தலைமை அதிகாரி ரம்யா மோகனகிறிஷ்ணன் அவர்கள் குறிப்பிட்டார். “இலங்கையில் நாம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டமானது எமது பிராந்தியங்களுக்கு இடையில் இணைப்புப்பாலத்தை அமைத்து, வெற்றிகரமான சர்வதேச தொழில்வாய்ப்புக்களை மேற்கொள்வதற்குத் தேவையான தகவல் விபரங்கள் மற்றும் வழிமுறைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்கு மாணவர்கள், ஆலோசகர்கள், மற்றும் கல்வித்துறை தலைவர்களுக்கு உதவுவதை உறுதி செய்கின்றது.”
சுகாதார அறிவியல், வணிகம், விவசாயம், பொறியியல், தொழில்நுட்பம், சூழல் அறிவியல், விருந்தோம்பல், மற்றும் படைப்பாக்கத் துறைகள் போன்ற எதிர்காலத்தை இலக்காகக் கொண்ட துறைகள் மீது குயின்ஸ்லாந்தின் ஆற்றலை பல்கலைக்கழக பிரதிநிநிதிகள் எடுத்துக் கூறினர்.“தாம் செயல்படுகின்ற பிராந்தியங்களின் ஆற்றலுடன் ஒருங்கிணைந்துள்ள விசேட கல்வித் துறைகளை எமது பிராந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குவதுடன், வேலைவாய்ப்புக்களைப் பொறுத்தவரை மாணவர் வெற்றி காண்பதற்கான முன்னேற்றத்திற்கு நேரடியான வாய்ப்புக்களை அவர்களுக்கு வழங்குகின்றன” என மோகனகிறிஷ்ணன் அவர்கள் எடுத்துக்கூறினார்.“தமது பட்டப்படிப்பை முடித்த பின்னர் மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்ற மாணவர்கள் தாம் தொழில் புரிய விரும்புகின்ற துறைகளில் வளம் பெறுவதுடன், விவசாயம், சூழல் அறிவியல் மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட முக்கியமான உள்ளூர் துறைகளின் மேம்பாட்டுக்கும் பாரிய பங்களிப்பை வழங்குவர்”.
சர்வதேச ரீதியாக வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்கு தம்மை தயாராக்கிக் கொள்கின்ற சர்வதேச மாணவர்களுக்கு மகத்தான மட்டத்தில் தொழிற்துறை அனுபவத்தையும், வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்வதற்கு தனது நிறுவனங்களுடன் இணைந்து Study Queensland உதவுகின்றது. அந்த மாநிலத்தில் கிடைக்கப்பெறுகின்ற விரிவான தொழில் வாய்ப்புக்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், 2032 ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் வரை அத்தகைய வாய்ப்புக்கள் பன்மடங்காக அதிகரிக்குமென மோகனகிறிஷ்ணன் அவர்கள் எதிர்வுகூறியுள்ளதுடன், நிர்மாணம், விருந்தோம்பல் மற்றும் பல உள்ளிட்ட தொழில்துறைகள் மத்தியில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக்களைத் தோற்றுவிக்கும் செயற்திட்டங்களைக் கொண்ட “உண்மையான பொற்காலம்”என இக்காலப்பகுதியைக் குறிப்பிட்டார்.
குயின்ஸ்லாந்து அரசாங்கத்தின் பிரத்தியேக சர்வதேச வர்த்தக முகவர் அமைப்பான Trade and Investment Queensland (TIQ) ஆனது சர்வதேச வர்த்தகம், முதலீடு, மற்றும் கல்வி சார்ந்த கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கு பொறுப்பு வகிக்கின்றது. குயின்ஸ்லாந்தில் கல்வி கற்று, வாழ்வை முன்னெடுப்பதற்கு உலகெங்கிலுமிருந்து திறமைசாலிகளை ஈர்த்து, வலுவான, நிலைபெறுதகு சர்வதேச கல்வி மற்றும் பயிற்சித்துறையை கட்டியெழுப்புவதே TIQ ன் வணிகப் பிரிவான Study Queensland ன் பணிநோக்கமாகும்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025