Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
J.A. George / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு அம்பியுலன்ஸ் என்பவற்றை நன்கொடையாக வழங்கும் வைபவம் இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பங்கேற்றார். கலாநிதி லால் திலகரத்ன மற்றும் ஜப்பான் இலங்கை நட்பு வாரியம் போன்றவற்றின் அர்ப்பணிப்புடன் உலகம் பூராகவும் பரவிவரும் கொவிட் -19 தொற்றினால் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும் இந்த வாகனங்களை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளனர்.
கொவிட் -19 தோற்று காரணமாக ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பின் அதிகாரிகளுக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை எனினும் நவீன தொழில்நுட்ப முறையினால் காணொளி மூலம் இந்த நிகழ்வை காணக்கூடியதாக அமைந்தது .
இதன்போது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மற்றும் கலாநிதி லால் திலகரத்ன ஆகியோர் காணொளி தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடினர்.
இதன்போது ஜப்பான் இலங்கை நட்பு அமைப்பினால் இலங்கை விமானப்படைக்கு இதுவரை காலமும் வழங்கிய உதவிகளுக்கும் தனது நன்றிகளை விமானப்படை தளபதி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago