J.A. George / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
இலங்கையில் ஆகவும் கூடிய 117 வயதான பெண் மரணமடைந்துள்ளார்.
தொடாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட அந்தப் பெண், நாகொட வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில், தொடாங்கொட நிஹின்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட வேலு பப்பானி என்ற வயது முதிர்ந்த பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
அந்த வயது முதிர்ந்த பெண், 1903 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதியன்று பிறந்துள்ளார். சிறிய நோய்க் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்த வயது முதிர்ந்த பெண் மரணமடைந்துள்ளார்.


23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026