Janu / 2026 பெப்ரவரி 15 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14, ஸ்டேடியம்கம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து 271 கிலோ 835 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ராகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஆறு மாதங்களாக குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதாகவும், அதற்காக மாதாந்தம் 50,000 ரூபாய் செலுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், தான் கஞ்சா களஞ்சியத்தின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026