Editorial / 2026 மார்ச் 23 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எச்.எம். சியாஜ்
மன்னார், பாலகமுனை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'புஸ்ஸதேவ' (SLNS Pussadeva) கடற்படைக் கப்பல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி (Diving) முறையில் பிடிக்கப்பட்ட 304 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த 21 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், டிங்கி படகு மற்றும் உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளப் பரிசோதகரிடம் (Fisheries Inspector) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago