Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2021 மார்ச் 14 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கல்வி நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கான டிஜிட்டல் தள நிகழ்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு, இம்மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டின் கல்வி கட்டமைப்பு மறுசீரமைக்கப்படவில்லை. பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்படுவது மாத்திரமன்றி, சிறப்பான கல்வியை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
புத்திஜீவிகள், மதகுருமார்கள், பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை சமூகம், பொதுமக்கள், ஊடகவியலாளர் உள்ளிட்ட சகலரது ஆலோசனைகளும் இதற்காக பெறப்படவுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025