2025 மே 07, புதன்கிழமை

குழு மோதல்; நால்வர் வைத்தியசாலையில்

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

அநுராதபுரம், ஹொரவ்பொத்தானை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு (28) ஏற்பட்ட மோதலில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சிலதும் சேதமாக்கப்பட்டுள்ளன.

ஹொரவ்பொத்தானை, முக்கரவெவ பகுதியில் மதுபோதையில் இருந்த நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் இதனை அடுத்து மதவாச்சி சந்திப் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்த வாகனங்களுக்குத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோதல் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியில் முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X