Janu / 2025 நவம்பர் 20 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் போதைப்பொருள் தொகையை தனது பயணப் பைக்குள் மறைத்துக்கொண்டு நாட்டுக்கு வந்து அனைத்து சோதனைகளும் முடித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த மூவர் புதன்கிழமை (19) இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவர் கொழும்பு 12 , 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த சாரதிகள் என தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அவர்களின் பயணப் பைகளில் இருந்து 04 பார்சல்களாக பொதி செய்யப்பட்ட 4 கிலோகிராம் 022 கிராம் "குஷ்" போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டீ.கே.ஜி. கபில

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago