Janu / 2024 ஜனவரி 08 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று யட்டபாத 09 அஞ்சல் பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
யட்டபாத பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யக புன்சர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இச் சம்பவம் தொடர்பில் தினியாவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago