2024 மே 06, திங்கட்கிழமை

கொழும்பில் மிகப்பெரிய உடற்பயிற்சி நிலையம்

Mayu   / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

EVOLUTION – கொழும்பு நகரத்தில் மிகப்பெரிய உடற்பயிற்சி வசதியை High Octane Fitness ஜனவரி 16 ஆம் திகதி ஆரம்பித்து வைத்துள்ளது,

கொழும்பு துடுகெமுனு வீதியில் அமைந்துள்ள இலங்கையின் பிரத்தியேகமான மற்றும் மிகப்பெரிய உடற்பயிற்சி கூடமான High Octane Fitness ஆனது, தனது புதிய கிளையை ஹெவ்லாக் சிட்டி மிரேகா டவரின் 31வது தளத்தில் EVOLUTION  by High Octane எனும் பெயரில் ஆரம்பித்து வைத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0112 123456 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளாம்.

இதேவேளை, உடற்பயிற்சி சாலைக்கு வருகை தரும் உடற்பயிற்சியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்தியப் பெருங்கடலின் அற்புதமான 360 டிகிரி காட்சி, கொழும்பு நகரத்தின் வானிலை, மலைகளின் காட்சி மற்றும் மறுபுறம் மத்திய கிராமப்பகுதி எனும் எழில் கொஞ்சும் காட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

2012ம் ஆண்டு கொஹுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள துடுகெமுனு பகுதியில் நிறுவப்பட்ட High Octane Fitness நிலையம் தேசிய தடகள பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள், உலகத்தரம் வாய்ந்த உடற்பயிற்சி உபகரணங்கள், சிறப்பு பிசியோதெரபி, பயிற்சி மற்றும் ஸ்பின் ஸ்டுடியோ போன்ற பல வசதிகளுடன் காணப்படும் உடற்பயிற்சி நிலையமாக காணப்படுகின்றது.

இலங்கை முழுவதும் உள்ள பல பகுதிகளில் WSO2, UNILEVER போன்ற பல பாரிய நிறுவனங்களில் மற்றும் இராணுவம் பணித்தலைமையிடம் மற்றும் இலங்கை சுங்க கூட்டுத்தாபனம் போன்ற அரசாங்க நிலையங்களிலும் அதே போல மினி உடற்பயிற்சி நிலையங்களையும் நிறுவி பராமரித்து வருகின்றது.

EVOLUTION  by High Octane Fitness  உடற்பயிற்சி நிலையமானது புதிய முயற்சியாக காணப்படுவதுடன் 8000 சதுர அடிக்கு மேல் பரந்து காணப்படுகிறது.

மேலும். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன 2024/25 ஸ்டேட் ஒஃப் தி ஆர்ட் முறையில் வடிவமைக்கப்பட்ட உபகரணங்களைக் கொண்டுள்ளது.

 இந்த உடற்பயிற்சி நிலையமானது 100 க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி இடங்கள், நவீன கார்டியோ டிரெட்மில்ஸ், பல குறுக்கு பயிற்சி இடங்கள், பிசியோதெரபி உபகரணங்கள் மற்றும் மீட்பு ஸ்பா, உட்புற ஓட்டம், Infrared Saunas லாக்கர் அறைகள் மற்றும் ஷேக் பார் ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இவ் உடற்பயிற்சி நிலையத்தின் இணை ஸ்தாபகரும் தொலைநோக்கு பார்வையாளருமான டேரின் வீரசிங்க  கருத்துத் தெரிவிக்கையில் “ஆரோக்கியத்துடன் தங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் இலங்கை பிரஜைகளிற்கு ஒரு நேர்த்தியான அனுபவத்தை வழங்கும் வகையிலேயே EVOLUTION  by High Octane உடற்பயிற்சி நிலையமானது அமையப்பெற்றுள்ளது.

நீங்கள் காலையிலேயோ அல்லது மாலையிலேயோ உடற்;பயிற்சி செய்ய தேர்வு செய்யும்போது மூடுபனி நிறைந்த கொழும்பு வானிலையையோ அல்லது இரவு நேரத்தில் மின்விளக்குகளினால் நிறைந்து மின்னும் கொழும்பவை பார்த்தபடியே உடற்பயிற்சி செய்வதை கற்பனை செய்து பாருங்கள்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த மாபெரும் செயற்றிட்டத்திற்கு எங்களுக்கு ஆதரவளித்த எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கும் அதேபோல குறிப்பாக நாங்கள் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பித்தது முதல் எங்களுடன் தொடர்ச்சியாக இணைந்துள்ள விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கும் நான் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். பல தசாப்தங்களாக எங்களை பெரிதும் ஆதரித்து உற்சாகமூட்டி வருகின்ற எனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் மிகவும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

​இதற்கமைய, இணை நிறுவனர் அசாந்தி வீரசிங்க ருத்து தெரிவிக்கையில், “இந்த துறையில் மிகவும் சிறந்த மற்றும் விளையாட்டுகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலான இலங்கை தேசிய விளையாட்டு வீரர்கள் என்பவர்களே எமது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களாக காணப்படுகின்றனர்.

எங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் நல்வாழ்வை கவனித்துக்கொள்வது மற்றும் எடை இழப்பு, தசை அதிகரிப்பு அல்லது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிப்பது எவ்வாறு போன்ற அவர்களின் இலக்குகளை அடைய வாடிக்கையாளர்களிற்கு உதவுவது எப்படி என்பது எமது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிற்கு தெரியும்.

அத்துடன் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் குறுகிய கால உடற்பயிற்சி வசதிகளை வழங்கி “உடற்பயிற்சி சுற்றுலாத்துறையை” மேம்படுத்துவதற்கும் நாங்கள் பங்களிப்பை வழங்குவதற்கும்; எதிர்பார்க்கின்றோம். பல ஆண்டுகளாக High Octane உடற்பயிற்சி நிலையத்தின் மையக்கருவாக காணப்படுவது “நேற்றைவிட இன்று வலிமையாக” என்பதேயாகும். இந்த மையக்கருவானது எங்களிற்கும் எங்கள் தேசத்திற்கும் மிகவும் பொருத்தமானது என நாங்கள் உணர்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, EVOLUTION  by High Octane உடற்பயிற்சி நிலையமானது வருடாந்திர அங்கத்தவர் தொகுப்புக்கள் மற்றும் அனைவரிற்கும் பொருத்தமான வகையில் கட்டமைக்கப்பட்ட தவணைத் திட்டங்களை தனது வாடிக்ககையாளர்களிற்கு வழங்க எதிர்பார்க்கின்றது.

இந்நிலையத்திற்கு புதிதாக இணையவுள்ள அங்கத்தவர்கள் வருடாந்த தொகுப்புக்களை கொள்வனவு செய்வதன் மூலம் இலவச விளையாட்டு உடல் மசாஸ், குறுக்கு பயிற்சி வகுப்புக்கள் மற்றும் இலவச தனிப்பட்ட பயிற்சிகள் எனும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X