R.Tharaniya / 2025 நவம்பர் 10 , பி.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி ஈப்பாந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் ஒரு டிங்கி மற்றும் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.
கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சி முனை கடற்படை பிரிவினால் ஈப்பாந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கருவலக்குடா கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது.
இதன் போது, அந்த டிங்கி படகால் எடுத்துச் செல்லப்பட்டு கருவலக்குடா கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினேழு பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த நான்காயிரத்து அறுநூற்று ஐந்து மருந்து மாத்திரைகள், பதினைந்தாயிரத்து அறுநூற்று இருபத்தேழு மருத்துவ களிம்புகள், நானூற்று தொண்ணூற்று நான்கு திரவ மருந்து பாட்டில்கள் மற்றும் நான்காயிரத்து இருபது மருந்து பாக்கெட்டுகளுடன் நான்கு சந்தேக நபர்களையும் ஒரு டிங்கி படகையும் கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர்
மேற்படி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 முதல் 32 வயதுக்குட்பட்ட கற்பிட்டி, துரையடி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026