Janu / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை நாவிமன பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய இரு சந்தேக நபர்கள் கேகாலை ஹெட்டிபொல பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கேகாலை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய, விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு தங்குமிடம் வழங்கிய ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
35 minute ago
37 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
44 minute ago
2 hours ago