Editorial / 2025 ஜனவரி 09 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்ம சக்தி அமைப்பினர்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளருக்குமிடையிலான சினேகபூர்வ சந்திப்பு செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.
தர்ம சக்தி அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை செவ்வாய்க்கிழமை (07) மேற்கொண்டு திணைக்கள பணிப்பாளர் M.S.M. நவாஸை சந்தித்து கலந்துரையாடினார்.





இச்சந்திப்பில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான பொறிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் தர்ம சக்தி அமைப்பும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இணைந்து எதிர்காலத்தில் நாடளாவியரீதியில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தர்ம சக்தி அமைப்பின் நிறைவேற்று செயலாளர் பாதிரியார் அநுர பெரேரா, உதவி செயலாளர் சிவ ஸ்ரீ சிவ தர்சக சர்மா குருக்கள், பொருளாளர் அஷ்ஷேய்ஹ் A. N. M. பிர்தௌஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஜனாப். ரிஸான் ஹுஸைன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான ஜனாப். சுல்கிப் மௌலானா, ஜனாப். அஸாம் லத்தீப் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் M. S. அலா அஹமட், வக்ப் நியாய சபை செயலாளர் (பதில்) M. N. M. ரோஸன், திணைக்கள சகவாழ்வு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் அஷ்ஷேய்ஹ் A. M. றிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
28 minute ago
29 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
29 minute ago
36 minute ago
1 hours ago