2025 மே 08, வியாழக்கிழமை

தங்கையை குத்திய சகோதரர் கைது

Mayu   / 2024 ஜனவரி 03 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரக்கறி வெட்டும் கத்தியால் தனது சகோதரியின் முதுகில் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை, படகொட, கோபிவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று மற்றொரு சகோதரனுடன் நள்ளிரவு வரை மது அருந்திய இருவரும் காயமடைந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

மேலும் வீட்டிற்கு வந்த இளைஞன் தனது சகோதரியுடன் வாக்கு வாதத்ில் ஈடுப்பட்டுள்ளார் இதனையடுத்து சமையலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சகோதரியின் முதுகில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

காயமடைந்த பெண் தர்கா நகரில் உள்ள உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X