Editorial / 2023 ஜூன் 01 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தந்தை செல்வா நற்பணி மன்றத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தந்தை செல்வா நினைவு தினம் ஜிந்துப்பிட்டி நீதிராஜா மண்டபத்தில் மன்றத் தலைவர் லயன் எஸ். ரவீந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை(04) மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த நினைவு நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் எம்.பி.யுமான மனோகணேசன்,சிறப்பு விருந்தினராக சென் அன்ரனிஸ் கல்லூரி அதிபர் இமானுவேல் ,கௌரவ விருந்தினர்களாக தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் ,கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி இராஜேந்திரன் தக்ஷயாயினி ,சைவ மங்கையர் கழக அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் ,விவேகானந்தா தேசிய பாடசாலை அதிபர் செல்வி ரி.தேவசியானி ,இராமகிருஷ்ணா பாடசாலை அதிபர் எஸ்.ராஜமாலினி ,புளூமெண்டல் பெண்கள் கல்லூரி அதிபர் ஏ .ஜே .நிர்மலா ,சென் அன்ரனிஸ் பிரதி அதிபர் மைதிலி உதய சந்திரன் ,கிறீன் லேன் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஏ.எஸ்.எம். சப்ரீன் .கொழும்பு கலைமகள் வித்தியாலய அதிபர் எம். முருகானந்தன் ஆகியோரும் அம்பேகமுவ இந்து கலாசார உறுப்பினர் வி.கல்பனா ,கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.சிவரஞ்சன் , கதிரேசன் அன்டன் விக்னேஸ்வரன் ,ஆசிரியர் ஆ.செல்வராஜ் ,அதிபர் எஸ்.பி.மைக்கல் ,சட்டத்தரணி பஞ்சாட்சரம்,பான் ஏசியா வங்கி முகாமையாளர் அந்தனி எட்வேட் கவின் ,சக்தி எப்.எம். நிகழ்ச்சி முகாமையாளர் கணாதீபன் ,என்டிபி வங்கி முகாமையாளர் பாலசுப்பிரமணியம் ஐங்கரன் ,சமூக சேவையாளர் எஸ்.எம்.செல்வக்குமார்ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அமரத்துவமடைந்த கிராம உத்தியோகஸ்தர் உருத்திரன் ஞாபகார்த்தமாக தந்தை செல்வா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்படவுள்ளதுடன் தந்தை செல்வா அறநெறி பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
தந்தை செல்வா நினைவு தின ஏற்பாடுகளை மன்றத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே. தளையரட்ணம் ,சமய துறைப்பொறுப்பாளர் ஜே .ஹருணந்தி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago